Home /News /tamil-nadu /

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளியையொட்டி 1000 சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு ஏற்பாடு

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளியையொட்டி 1000 சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு ஏற்பாடு

சிறப்பு பேருந்து

சிறப்பு பேருந்து

வழக்கமாக நாள்தோறும் 2 ஆயிரத்து 500 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், தொடர் விடுமுறை காரணமாக கூடுதலாக ஆயிரம் அரசுப் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு வசதியாக 1000 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

    தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் வேலை நிமித்தமாகவும், கல்வி நிமித்தமாகவும் சென்னை போன்ற நகரங்களில் அதிகளவில் தங்கியுள்ளனர். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை தினங்களில் இவர்கள் பெருமளவு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர்.

    அதேபோல், ஏப்ரல் 14ம் தேதி (வியாழன்) ஏப்ரல் 15(புனித வெள்ளி) மற்றும் சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை என தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு விடுமுறை வருகிறது. இதனால் பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ரயில்களில் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் பேருந்து பயணமே இவர்களின் தேர்வாக உள்ளது.

    இதையும் படிங்க: ஜன் ஔஷதி கடைகளில் மருந்துகள் விலை குறைவு' - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்


    இவ்வாறு,  சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல தமிழக அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக நாள்தோறும் 2 ஆயிரத்து 500 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கூடுதலாக ஆயிரம் அரசுப் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Good Friday, Special buses, Tamil New Year

    அடுத்த செய்தி