முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? ஆளுநர் கேள்வி.. தமிழ்நாடு சட்டத்துறை விளக்கம்..

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? ஆளுநர் கேள்வி.. தமிழ்நாடு சட்டத்துறை விளக்கம்..

ஆர்.என்.ரவி

ஆர்.என்.ரவி

ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா என ஆளுநர் கேள்வி எழுப்பி இருந்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் சட்ட மசோதா தொடர்பாக ஆளுநர் அனுப்பிய கடிதத்திற்கு சட்டத்துறை விளக்கம் அளித்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் தரப்பில் வியாழக்கிழமை விளக்கம் கேட்கப்பட்டது. அதில், ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா என்றும், அதற்கு அளவீடு என்னவென்றும் ஆளுநர் கேள்வி எழுப்பி இருந்தார். இது தொடர்பாக சட்டத்துறை உரிய விளக்கத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Online rummy, RN Ravi, Tamilnadu