Home /News /tamil-nadu /

புலிகளை பாதுகாக்கும் PROJECT TIGER திட்டம் -  நிதி ஒதுக்கி அரசாணைகள் வெளியீடு 

புலிகளை பாதுகாக்கும் PROJECT TIGER திட்டம் -  நிதி ஒதுக்கி அரசாணைகள் வெளியீடு 

புலி

புலி

PROJECT TIGER திட்டத்தின் மூலம் புலிகளின் வழித்தடங்களை பாதுகாத்தல், புலிகள் வசிப்பிடங்களை மேம்படுத்த உள்ளன

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும், முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகளை பாதுகாக்க நிதி ஒதுக்கி அரசாணைகள் வெளியீடு.

நாடு முழுவதும் உள்ள புலிகள் மற்றும் புலிகள் வசிக்கும் காடுகளை பாதுகாக்க, PROJECT TIGER எனும்  திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியுதவியுடன், புலிகளை பாதுகாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. மத்திய அரசின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்பு தொகையை ஒதுக்கி அரசாணைகளை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு இரண்டாம் தவணையாக ரூ.2.53 கோடி இரண்டாம் தவணையாக ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு இரண்டாம் தவணை நிதியாக ரூ.5.26 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் புலிகளின் வழித்தடங்களை பாதுகாத்தல், புலிகள் வசிப்பிடங்களை மேம்படுத்துதல், காட்டுத் தீ ஏற்படாமல் தடுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

 
Published by:Ramprasath H
First published:

Tags: Tamilnadu, Tiger

அடுத்த செய்தி