ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மின் கட்டணம் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைப்பு - தமிழக அரசு அறிவிப்பு

மின் கட்டணம் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைப்பு - தமிழக அரசு அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக குறைக்கலாம் என முடிவு செய்து உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு அண்மையில் மின்சார பயன்பாட்டிற்கான கட்டணத்தை அதிகரித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இந்த மின்கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுவோம் என்ற தெரிவித்தன.

    இந்நிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2022-2023 ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.09.2022 முதல் மின்கட்டண ஆணை எண்.7/22, நாள் 09.09.2022-ன் படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டி உள்ளதால், ஒருநாளின் உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை (Peak Hour Charges) குறைக்கும்படி பல்வேறு குறு, சிறு (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள்: வரைவு பட்டியலை வெளியிட்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு

    குறு, சிறு (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கிய பங்காற்றுவதை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையினை ஏற்று குறைந்தழுத்த மின் இணைப்பு (Low Tension III-B) கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக குறைக்கலாம் என முடிவு செய்து உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

    இவ்வாறு மின்கட்டணத்தை குறைப்பதால் தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Murugesh M
    First published:

    Tags: EB Bill, Electricity