• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழ்நாடு அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்த திட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்த திட்டம்

அகவிலைப்படி

அகவிலைப்படி

தமிழ்நாட்டிலுள்ள அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படியை வழங்கவும், 17 விழுக்காடாக இருந்த அகவிலைப்படியை 28 விழுக்காடு உயர்த்தி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

  • Share this:
    மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டதையடுத்து, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

    நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தொடர்ந்து, கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் மூன்று தவணைகளுக்கு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு நிறுத்தி வைத்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அதிக அளவு தொகை செலவு செய்யப்பட்டது மற்றும் போதிய நிதி ஆதாரம் இல்லாததாலும் இந்த முடிவெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 விழுக்காட்டிலிருந்து இருந்து 28 விழுக்காடாக உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 விழுக்காட்டிலிருந்து 28 விழுக்காடாக உயர்த்தப்பட்டது.

    மேலும் படிக்க: நல்ல பலன் தரும் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - தகுதி, வட்டி விகிதங்கள் என்ன?


    இதனிடையே, தமிழ்நாட்டிலுள்ள அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படியை வழங்கவும், 17 விழுக்காடாக இருந்த அகவிலைப்படியை 28 விழுக்காடு உயர்த்தி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தங்க நகைக்கடன் Vs பர்சனல் லோன் - இரண்டில் சிறந்தது எது?


    சுமார் 18 இலட்சம் அரசு ஊழியர்கள் இதன் மூலம் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 2,000 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: