Home /News /tamil-nadu /

Exclusive: மெட்ரோ ரயிலின் 6 ஆண்டுகால இழப்பை ஏற்றுள்ள தமிழக அரசு: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்

Exclusive: மெட்ரோ ரயிலின் 6 ஆண்டுகால இழப்பை ஏற்றுள்ள தமிழக அரசு: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்

சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ

Chennai Metro Rail: பராமரிப்பு செலவு போக சராசரியாக வருடத்திற்கு சுமார் 525 கோடி ரூபாய் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு இழப்பு ஏற்படுகிறது. இந்த மொத்த இழப்பையும் தமிழக அரசு வழங்கி வருவதாக மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது. 

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கடந்த 6 ஆண்டுகளாக இழப்பை சந்தித்து வருவதும், இழப்பு தொகையை முழுமையாக தமிழக அரசு செலுத்தி வருவதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்வியின் மூலம் தெரியவந்துள்ளது.

மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து  மெட்ரோ ரயில் ஓட்டத்திற்கான செலவை ஏற்றுக்கொண்டனர். ஆனால் மெட்ரோ ரயிலில் போதிய வரவேற்பு இல்லாத நிலையால் வருடா வருடம் மெட்ரோவிற்கு 812கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதில் பயணிகள் கட்டணமாக 287 கோடி ரூபாய் கிடைக்கிறது.

பராமரிப்பு செலவு போக சராசரியாக வருடத்திற்கு சுமார் 525 கோடி ரூபாய் மெட்ரோவிற்கு இழப்பு ஏற்படுகிறது. இந்த மொத்த இழப்பையும் தமிழக அரசு வழங்கி வருவதாக மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது. இதேபோல் ஏன் தமிழக அரசு சார்பில் இயக்கப்படும் சேவை துறையான போக்குவரத்து கழகத்திற்கு வருடா வருடம் இழப்பை தமிழக அரசு ஏற்பதில்லை என போக்குவரத்து சங்கங்கள் கேள்வி எழுப்பி உள்ளன.

போக்குவரத்து துறையில் சுமார் 48000 கோடி ரூபாய் கடன் உள்ளது ஆனால் இது கடந்த கால ஆட்சிகளின் நிர்வாக திறன் இன்மையின் காரணமாக ஏற்பட்டது என்றும்  தமிழ்நாடு அரசு கொடுக்கும் இலவச டிக்கெட் கட்டணத்தையும் அரசு வழங்குகிறது. இருந்தாலும் தமிழக அரசு தொழிலாளர் நலன் கருதி இந்த கடனை எவ்வாறு அடைக்க முடியும் என்ற பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறுகிறார் ராஜ்யசபா உறுப்பினர் சண்முகம்.

 

இதையும் படிங்க: இந்து சமய அற நிலையத்துறையின் சிவராத்திரி விழாவுக்கு தி.க., வி.சி.க. எதிர்ப்பு... என்ன முடிவை எடுக்கப்போகிறார் முதல்வர் ஸ்டாலின்?

இதுவரை சுமார் ரூ. 3000 கோடி வரை இழப்பை தமிழக அரசு மெட்ரோ ரயிலுக்கு  வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் எத்தனை ஆண்டுகள் இதுபோல் இழப்பை செலவிட உள்ளது என்பதை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 
Published by:Murugesh M
First published:

Tags: Chennai metro, Metro Rail, Tamilnadu government, Under RTI

அடுத்த செய்தி