ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொரோனா வருது... தயாரா இருங்க.. தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு!

கொரோனா வருது... தயாரா இருங்க.. தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு!

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சீனாவில் பிஎஃப்.7 வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் பரவாமல் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளன. பல்வேறு மாநில அரசுகள் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.

தமிழ்நாட்டு விமான நிலையங்களில் கொரோனா சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் ஒரு  சுற்றறிக்கையை இன்று அனுப்பியுள்ளது.

அதில், கொரோனா நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனைக் கருவிகளை முன்கூட்டியே வாங்கி வைத்திருக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

மேலும், N-95 முகக்கவசம், பிபிஇ கிட் ஆகியவற்றை இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி மையங்கள் முழு நேரமும் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர்களை அவசர கால பயன்பாட்டிற்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனாவை எதிர்கொள்வதற்காக நடவடிக்கைகளில் முழு மூச்சில் இறங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. அதுபோலவே, கொரோனா எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமானால் மட்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

First published: