Tamil Nadu Lockdown Restrictions: தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: என்ன இயங்கும்? என்ன இயங்காது?

மாதிரிப்படம்

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டுவர  நாளை முதல் மே 20 வரை புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,238 பேருக்கு தமிழகத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 144 பேர் உயிரிழந்துள்ளனர்.  வைரஸ் பரவலின் வேகம் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.

    எவை இயங்கும்? எவை இயங்காது?

    1. அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை

    2. அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

    3. பயணியர் இரயில், மெட்ரோ ரயில்,  தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை  டாக்ஸி ஆகியவற்றில் 50 % இருக்கைகளில் மட்டும் பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    4.பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.  வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் , காய்கறி கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    5. தனியாக செயல்படுகின்ற  மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி விற்பனை செய்யும் கடைகள் பகல் 12 மணிவரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் குளிர்சாதன  வசதியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஒரே சமயத்தில்  50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    Must Read..  கொரோனா தீவிரமடையும் சூழலில் மது விற்பனையை அனுமதிப்பது ஏன்? நீதிமன்றம் கேள்வி

    6. மளிகை,பலசரக்கு மற்றும் காய்கறி விற்பனை செய்யும் கடைகளை தவிர அனைத்து கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  மருந்தகங்கள், பால் விநியோகம்போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

    7. அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை.  முழு ஊரடங்கு அமலில் உள்ள  நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.


     8.உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்குத் தடை செய்யப்படுகிறது. திரையரங்குகள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    9.ஏற்கெனவே, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், 25 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




    10.  ஏற்கெனவே, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள், இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்துக் கட்டுப்பாட்டு பகுதிகளிலும், அழகு நிலையங்கள், இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


    இரவு நேர ஊரடங்கு

    1. அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமான நிலையம் / ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.

    2.  அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள்  அனுமதிக்கப்படும்.




    3.ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.

    4.பெட்ரோல் மற்றும் டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    5. தொலைத்தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், இரவு நேரப் பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.




    6. தரவு மையங்களில் பராமரிப்புப் பணி, மருத்துவம், நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்ளலாம்.

    7. கிடங்குகளில், சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும் சரக்குகளை சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

    8.  தடையின்றித் தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களில் இரவு நேரப் பணிக்குச் செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதிக் கடிதத்துடன் பணி இடத்துக்கு சென்று வரலாம்.

    9.இரவு நேர ஊரடங்கின்போதும், ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் இருக்கும் முழு ஊரடங்கின்போதும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும், சரக்கு போக்குவரத்திற்கும், தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதிக்கப்படும்.





    பிற கட்டுப்பாடுகள்

    1.சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில், மீன் மார்க்கெட், மீன் கடைகள், கோழி இறைச்சிக் கடைகள் மற்ற இறைச்சிக் கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இதர நாட்களில் காலை 6 மணி முதல் 12 வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. .

    2. பொது மக்கள் வெளியில் செல்லும் போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

     


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்


    Published by:Murugesh M
    First published: