Home /News /tamil-nadu /

கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் ஆதிக்கம்: அதிரடி உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு

கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் ஆதிக்கம்: அதிரடி உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு

கரும்பு கொள்முதல்

கரும்பு கொள்முதல்

நியூஸ்18 தொலைக்காட்சியில் பொங்கல் பண்டிகை: கரும்பு கொள்முதலில் கொள்ளை? என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கரும்பை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும்படி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பொங்கல் இலவச தொகுப்பில் வழங்கப்படும் கரும்பை கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் இருப்பது தொடர்பாக நியூஸ் 18 தொலைக்காட்சியில் செய்தி வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து, நேரடியாக விவசாயிகளிடம் இருந்துமட்டுமே கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தமிழக அரசின் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு இன்று முதல் குடும்ப அட்டை தாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் முழு கரும்பும் வழங்கப்படுகிறது. இந்த கரும்பை கொள்முதல் செய்வதில் முறைகேடு நிகழ்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக நியூஸ்18 தொலைக்காட்சியில் பொங்கல் பண்டிகை: கரும்பு கொள்முதலில் கொள்ளை? என்ற தலைப்பில் செய்தி வெளியானது. கரும்புக்கு அதிகபட்சமாக 13 ரூபாய் மட்டுமே தர முடியும் என இடைத்தரகர் ஒருவர் விவசாயியிடம் பேரம் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பொங்கலுக்கான கரும்பினை நேரடியாக விவசாயிகளிடமே கொள்முதல்  செய்ய வேண்டும் என  தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பான உத்தரவில்,



    1. பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும்
    2. கொள்முதல் செய்யப்படும் முழு கரும்பின் விலை அதிகபட்சம் ரூ.33/- ஆக இருக்க வேண்டும் (போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் உட்பட).
    3. கொள்முதல் செய்யப்படும் கரும்பின் உயரம் 6 அடிக்கு குறையாமல் இருக்கவேண்டும்.
    4. கொள்முதல் செய்யப்படும் கரும்பு மெலிதாக இல்லாமல் சராசரி தடிமனைவிட கூடுதலாக இருக்க வேண்டும்.
    5. நோய் தாக்கிய கரும்பு கொள்முதல் செய்யப்படக் கூடாது.

    இதையும் படிங்க: போக்குவரத்து துறை ரூ.48,154 கோடி நஷ்டத்தில் செயல்படுகிறது -அமைச்சர் ராஜகண்ணப்பன்


    6. அந்தந்த மாவட்டங்களில் விளையும் கரும்பினை கொள்முதல் செய்வதற்குமுன்னுரிமை அளிக்க வேண்டும். இதில் விவசாயிகள் தரப்பிலிருந்து எந்தவிதமான புகார்களுக்கும் இடமளிக்கக் கூடாது.
    7. இந்த வருடம் கரும்பு கொள்முதல் விலை 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்றவாறு விவசாயிகளிடம் கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட விலையைவிட கூடுதலாக விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.எக்காரணம் கொண்டும் கடந்த ஆண்டு கொள்முதல் செய்த விலையையோ அல்லது அதற்கு குறைவாகவோ விலை நிர்ணயம் செய்யப்படக் கூடாது.

    8. கரும்பு கொள்முதல் செய்யும்போது, அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாகவோ அல்லது வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாகவோ மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்கள் அனுமதிக்கப்படக் கூடாது.

    9. கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான விலை விவசாயிகளுக்கு உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும்.

    மேலும் படிங்க: சிக்காத ராஜேந்திர பாலாஜி; திணறும் காவல்துறை


    10. எந்தெந்த நாளில் எத்தனை அட்டைகளுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறதோ, அதற்கேற்றவாறு கரும்பு படிப்படியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் முன்கூட்டியே அனைத்து கரும்பையும் கொள்முதல் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் கரும்பு காய்ந்து போவதற்கான வாய்ப்பு உள்ளது.
    11. கொள்முதல் செய்யப்படும் கரும்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது.
    12. கரும்பின் நுனியிலிருக்கும் தோகையை வெட்டாமல் முழு கரும்பையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும்.
    13. குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்குவதில் எந்தவிதமான புகார்களுக்கும் இடமளிக்காமல் விநியோகம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Pongal Gift, Tamilnadu govt

    அடுத்த செய்தி