ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஓபிசி சான்றிதழ்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு!

ஓபிசி சான்றிதழ்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதிச் சான்றிதழ் பெறுவதில் சிரமம் இருப்பதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இந்திய அரசின் 27% இட ஒதுக்கீட்டின் கீழ் பயன் பெற இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஓபிசி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு புதிய உத்தரவை வழங்கியுள்ளது.

மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பிரிப்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு 1993ஆம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பிலும், 2007ஆம் ஆண்டு முதல் ஐஐடி போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கும் வழங்கப்படுகிறது.   இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில்  வளமான பிரிவு (Creamy layer) நீக்கியே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு சாதி சான்றிதழ் வழங்கும் போது பெற்றோரின் ஊதியம் மற்றும் வேளாண் வருமானத்தை கணக்கில் கொள்ள வேண்டியதில்லை என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இத் தொடர்பாக அரசு முதன்மை செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ள கடிதத்தில், இந்திய அரசு பணியிடங்களுக்கான நியமனங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கையில் 27% இட ஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) வளமான பிரிவினரை(Creamy layer) நீக்கி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் இந்திய அரசால் அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், வளமான பிரிவினரை நீக்குவதற்கான நெறிமுறைகளும் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. வளமான பிரிவினரை நீக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரம்பை கணக்கிடும் போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தைச் சேர்க்கக் கூடாது என வழிகாட்டு நெறிமுறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 1993 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு 1 லட்சத்திலிருந்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு ரூ.8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திராவிடத்தால் இந்தி எதிர்ப்பாளரானேன்- தமிழ் வாழ்க என உரக்க சொல்ல வேண்டும்: கமல்!

மேற்சொன்ன மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சாதி சான்றிதழ் வழங்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவர்கள்கேட்டுக்கொள்ளப்படுவதாகவும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதிச் சான்றிதழ் பெறுவதில் சிரமம் இருப்பதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இந்திய அரசின் 27% இட ஒதுக்கீட்டின் கீழ் பயன் பெற இயலாத சூழ்நிலை ஏற்படுவதாகவும் இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே,  வளமான பிரிவினரை நீக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 8 லட்சம் ரூபாய் என்ற பெற்றோரின்  ஆண்டு வருமானத்தை கணக்கிடும்போது ஊதியம் மற்றும்  விவசாயம் ஆகியவற்றில் இருந்து பெறும் வருமானத்தை கணக்கில் கொள்ளக்கூடாது என்றும் சான்றிதழ்களை கால தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தமிழுக்கு இனி முதலிடம்!

எடுத்துக்காட்டாக, ஊதிய வருமானம் ரூ.3 லட்சம், 2. வேளாண் வருமானம் ரூ.4 லட்சம் , 3. இதர வருமானம் ரூ.3 லட்சம் என இருக்கும்பட்சத்தில் ஊதியம் மற்றும் வேளாண் வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் இதர வருமானத்தை மட்டும் கணக்கில் கொண்டு ஓபிசி சான்றிதழ் வழங்கலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

First published:

Tags: OBC Reservation, Tamilnadu government