முனைவர் தொ.ப. உள்ளிட்டோரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்: தமிழ் வளர்ச்சி துறையின் முக்கிய அறிவிப்புகள்!

தொ.பரமசிவன்

தமிழில் பெயர் எழுதும்போது முன்னேற்றத்தையும் (Initial) தமிழிலேயே எழுதும் நடைமுறையை அனைவரும் பின்பற்ற ஊக்குவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  முனைவர் தொ.பரமசிவன், சிலம்பொலி சு.செல்லப்பன் உள்ளிட்ட தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை  ஆக்கப்படும்  என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

  தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று  நடைபெற்றது. இதில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு 20 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை,

  • தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இதற்கான சிறப்பு நிதியாக ரூபாய் 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

  • அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்படும். இதற்கென தொடர் செலவினம் ஆக ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

  • பள்ளி மாணவர்கள் தங்களின் தமிழ்மொழிக் இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் திறனறித் தேர்வு நடத்தி ஆண்டுதோறும் 1500 பேர் தெரிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையாக திங்கள்தோறும் ரூபாய் 1500 வழங்கப்படும்.


  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  • திருக்குறள் முற்றோதல் செய்து பரிசுத் தொகையை வழங்காமல் நிலுவையில் உள்ள 219 மாணவர்களுக்கு இந்த ஆண்டு குரல் பரிசு வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 70 மாணவர்கள் என்று உச்சவரம்பு நீக்கப்பட்டு பரிசுத் தொகை உயர்த்தப்படும்.

  • தமிழ் அறிஞர்களான சிலம்பொலி சு.செல்லப்பன்,முனைவர் தொ பரமசிவன்,புலவர் இளங்குமரனார், திரு முருகேச பாகவதர், திரு சங்கர வள்ளிநாயகம் மற்றும் புலவர் செ.ராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பரிவுத் தொகை வழங்கப்படும்.

  • திருக்கோயில்களில் தேவாரம் திருவாசகம் திவ்யப் பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும்.


   

  • தமிழறிஞர்கள் எழுத்தாளர்களின் பிறந்தநாளன்று இலக்கியக் கூட்டங்கள் நடத்திட ரூபாய் 15 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும்.

  • புகழ்பெற்ற தலைவர்கள் தமிழறிஞர்களின் ஒலி/ஒளிப் பொழிவுகள் ஆவணம் ஆக்கப்படும். இதற்கென ஆண்டுதோறும் ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். சங்க இலக்கியங்கள் சந்தி பிரிக்கப்பட்டு நூல்களாக அச்சிட்டு குறைந்த விலையில் வெளியிட ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்

  • தமிழில் பெயர் எழுதும்போது முன்னேற்றத்தையும் (Initial) தமிழிலேயே எழுதும் நடைமுறையை அனைவரும் பின்பற்ற ஊக்குவிக்கப்படும்.


  மேலும் படிக்க: ரகசியம்.. பரம ரகசியம்: சட்டப்பேரவையில் பாடிய பாடல் குறித்து ஓபிஎஸ் தகவல்!
  • வணிக நிறுவனங்களில் வழங்கப்படும் பற்றுச் சீட்டுக்கள் தமிழிலும் அச்சிட்டு வழங்கப்படும். குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட ஊக்குவிக்கப்படவும் வழிமுறைகள் உருவாக்கப்படும்.

  • அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பெறப்பட்ட முனைவர் பட்ட ஆய்வு சுருக்கம் மற்றும் ஆய்வு தொகுப்புகள் தமிழில் தொகுத்து தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வாயிலாக இணையத்தில் வெளியிடப்படும்.  • அமைச்சர் தங்கம் தென்னரசு

  • பழந்தமிழ் இலக்கியங்கள் நவீன இலக்கியங்கள் ஒலி நூல்களாக வெளியிட ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும். செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின் கீழ் புதிய கலைச் சொற்கள் உருவாக்கம், இணைய வழியில் அறிமுகம் என ஆண்டுதோறும் ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும்.

  • தொல்காப்பியம் முதல் முத்தொள்ளாயிரம் வரையிலான 41 செவ்வியல் நூல்கள் எளிதாகவும் ஒரே இடத்தில் தொகுப்பாகவும் கிடைக்கப் பெற வழிவகை செய்யப்படும் இதற்கு ஆண்டுதோறும் ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும்

  • நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இதற்கு  ஆண்டுதோறும் 81 லட்சத்து 60 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.


  இதையும் படிங்க: போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
  • தமிழைப் பிற மொழியினருக்கு கற்பிக்கும் வகையில் திராவிட மொழிகள் உட்பட பிற மொழிகளில் பாடநூல்களும் பன்மொழி அகராதி தமிழ் கற்பிக்கும் பொருள் குறுஞ்செயலிகள் உருவாக்கப்படும்.

  • சுருக்கு பையின் சொற்கள் தமிழ் மின்நூல்கள் அரசு தலங்களில் உள்கட்டமைப்புகள் போன்றவை படைப்பாக்கப் பொது உரிமத்தின் வெளியிடப்படும். ஆட்சி சொல் அகராதி திருத்திய பதிப்பு மற்றும் அரசு துறைகளில் புதிய கலைச்சொற்கள் தொகுத்து வெளியிடப்படும்.

  Published by:Murugesh M
  First published: