ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ,50,000: அரசாணை வெளியீடு

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ,50,000: அரசாணை வெளியீடு

கோப்புப் படம்

கோப்புப் படம்

கொரோனா தொற்று பாதித்து மற்றும் தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதுவரை 4.74 லட்சம் பேர் இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் மாநில அரசி பேரிடர் நிதியிலிருந்து இந்த தொகை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. எனினும், நிதி வழங்கப்படுவது தொடர்பாக அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்து வந்தது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த நவம்பர் 9ம் தேதி பதிலளித்த தமிழக அரசு,  தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்து 36 ஆயிரத்து 220 பேர் மரணமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் கணினித் தமிழ் விருது: 2021ம் ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவிப்பு

இந்நிலையில், கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில்,  கொரோனா தொற்று பாதித்து மற்றும் தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட காலம் முதல் கொரோனா பெருந்தொற்று அல்ல (அல்லது) வேறு உத்தரவுகள் வரும் வரையிலான காலக்கட்டத்திற்கு இந்த நிவாரணம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மதுரையில் எய்ம்ஸ் ஒரு செங்கலோடு நிற்பதுபோன்று நிப்பரும் மாறிவிடக் கூடாது: மக்களவையில் சு.வெங்கடேசன் பேச்சு

கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக நிவாரண உதவியை வழங்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

First published:

Tags: Corona, Covid-19, Tamilnadu government