ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆன்லைன் ரம்மி தடை செய்வதே தமிழ்நாடு அரசின் நோக்கம் - அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி தடை செய்வதே தமிழ்நாடு அரசின் நோக்கம் - அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

ஆன்லைன் ரம்மியை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் சில விளக்கம் கேட்டிருந்தார்.

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், டிசம்பர் 1ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று ஆளுநரை சந்தித்து விளக்கமளித்தார். இந்நிலையில் அந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

இந்நிலையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மியை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கம் எனவும் மத்திய அரசு கொண்டு வரும் சட்டம், ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை மறைமுகமாக பாதுகாக்கும் வகையில் இருந்தால், அது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.

First published:

Tags: CM MK Stalin, Online rummy, RN Ravi