நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை கையாள மேலாண்மை குழு - தமிழக அரசு உத்தரவு
நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை கையாள மேலாண்மை குழு - தமிழக அரசு உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம்
Pending Court Cases: வரிவிதிப்பு, நில விவகாரங்கள், பணியாளர் விவகாரங்கள் மற்றும் கொள்முதல் பிரச்னை தொடர்பான அனைத்து முக்கிய வழக்குகளும் இக்குழுவால் கண்காணிக்கப்படும்
பெரும் நிதித் தாக்கங்களுடன் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை திறமையாக கையாள வழக்கு இடர் மேலாண்மை அமைப்பை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பெரும் நிதித் தாக்கங்களுடன் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை திறமையாக கையாள பஞ்சாப் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் அனுபவமிக்க சட்டவல்லுநர்கள் அடங்கிய குழுவை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளை திறமையாக கையாளவும், அதன்மூலம் பொதுநலன் பாதுகாக்கப்படுவதையும், அரசுக்கு உடனுக்குடன் வளங்கள் கிடைப்பதையும் உறுதி செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை.
வரிவிதிப்பு, நில விவகாரங்கள், பணியாளர் விவகாரங்கள் மற்றும் கொள்முதல் பிரச்னை தொடர்பான அனைத்து முக்கிய வழக்குகளும் இக்குழுவால் கண்காணிக்கப்படும். நீதிமன்றத்தில் நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளில் நிதிச்செலவை குறைப்பதற்கான பரிந்துரைகளை வழங்குதல், அதிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை திறம்பட கையாளுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வது இக்குழுவின் பணிகள் ஆகும். ஒவ்வொரு பெரிய வழக்குகளையும் கண்டறிந்து அவற்றின் முன்னேற்றத்தினை கண்காணித்தல், அதற்கு தேவையான ஆவணங்களை தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்வதும் இந்த குழுவின் முக்கிய பணிகளாகும்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.