கொரோனா நிவாரண தொகை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

கோப்புப் படம்

தமிழக அரசின் நிவாரண தொகை மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய  தொகுப்பினை இதுவரை 99 சதவீத மக்கள் பெற்றுள்ள நிலையில், பெறாதவர்களுக்கு கால அவகாசம் வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 • Share this:
  நியாயவிலை கடைகளில்  தமிழக அரசின் கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்களை  பெற்றுக்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் மார்ச் மாதத்தில் பரவத் தொடங்கிய கொரோனா 2வது அலை மே மாதத்தில் உச்சம் பெற தொடங்கியது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் கடந்த மே மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கியதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தமிழக அரசு சார்பில்  ரூ.4 ஆயிரம் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  2 மாதங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் என்ற வீதத்தில் இந்த தொகை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதனுடன் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது.  எனினும், ஊரடங்கு காரணமாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் சொந்த ஊர்களுக்கு சென்ற ஒருசிலர் இந்த நிவாரண தொகையை பெற முடியாத நிலை ஏற்பட்டது.

  மேலும் படிக்க: ஒரு கிலோ இறைச்சிக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்- மதுரையில் ‘பலே’ ஆஃபர்!


  இந்நிலையில், அவர்களுக்கு மேலும் கால அவகாசம் வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தமிழக அரசின் நிவாரண தொகை மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய  தொகுப்பினை இதுவரை 99 சதவீதம் பேர் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு சிறப்பு செயலி!  இதுவரை பெறாதோர் 31ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு பெற்றுக் கொள்ள இயலாதவர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர் நிலையிலான அலுவலரிடம் அனுமதி பெற்று ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு பிறகும் பொருட்களை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
  Published by:Murugesh M
  First published: