ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசாணை 115 குறித்த சர்ச்சை : புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் - தமிழக அரசு விளக்கம்

அரசாணை 115 குறித்த சர்ச்சை : புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் - தமிழக அரசு விளக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Tamilnadu Government | அரசாணை 115 குறித்த சர்ச்சைக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழக அரசின் மனிதவள மேலாண்மை துறை அரசாணை எண். 115 கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த ஆணையின்படி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி  பரூக்கி தலைமையில் மனிதவள சீர்திருத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

  அரசின் பல்வேறு நிலை பணியிடங்களை திறன் அடிப்படையில், ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்வது, சி பிரிவு டி மற்றும் சி பிரிவு பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்புவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்வது என இந்த குழு ஆய்வு செய்து 6 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.

  மேலும், வெளி முகமை ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பட்டியலிட்டு, பல்வேறு நிலை மனிதவள அரசு பணியிடங்களை, அவற்றை கொண்டு நிரப்புவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்வது போன்ற சில ஆய்வு வரம்புகள் அக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

  இதையும் படிங்க : கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை திறக்ககோரிய வழக்கில் தமிழக அரசின் நிலையாடு என்ன? - ஐகோர்ட்

  இந்நிலையில், இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. இளைஞர்களின் எதிர்கால அரசு வேலை என்ற கனவுகளுக்கும், 69 சதவீத இட ஒதுக்கீடு என்ற சமூக நீதிக்கும் மூடுவிழா காண்பதாக இருப்பதாக பல்வேறு கட்சிகள், அமைப்புகள் மற்றும் அரசு பணியாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன.

  மேலும், இந்த குழவின் ஆய்வு வரம்புகள் அனைத்தும் ஊழியர் விரோத நடவடிக்கைகளாகவே உள்ளன என அரசுப் பணியாளர்கள் சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தும் மனு அளித்தன.

  இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கான பயிற்சி முறைகளை சீரமைப்பதை முக்கிய நோக்கங்களாக கொண்டு மனிதவள சீர்திருத்த குழு 18.10.2022 நாளிட்ட அரசாணை (நிலை) எண்.115-ல் மனிதவள மேலாண்மை துறையால் அமைக்கப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் உள்ளிட்ட அரசு பணியாளர் சங்கங்கள் மேற்படி சீர்திருத்த குழுவின் ஆய்வு வரம்புகளில் குறுகிய கால பணியிடங்களை வெளிமுகமை மூலமாக நிரப்புவது குறித்து தங்களுடைய கோரிக்கைகளைக் குறிப்பிட்டு முதலமைச்சரிடம் இன்று (09.11.2022) மனு அளித்தனர்.

  இதையும் படிங்க : காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்.. விசாரணையில் வெளியான திடுக் தகவல்

  அவர்களுடைய கோரிக்கையை  கேட்டறிந்த முதலமைச்சர் எந்தவொரு குழு அமைப்பினும் அதன் பரிந்துரைகள் அரசு அலுவலர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்வதுடன், பணியாளர் சங்கங்களின் கருத்துகளையும் கேட்ட பின்பே அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்ததோடு. இக்குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு. புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்" என கூறப்பட்டுள்ளது.

  Published by:Karthi K
  First published:

  Tags: CM MK Stalin, Tamilnadu