6 வருஷம் இல்ல 9 வருஷமாம்.. தமிழக அரசுப்பேருந்துகளின் ஆயுட்காலம் உயர்வு - அரசாணை வெளியீடு

அரசுப்பேருந்து

அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களுக்கு 4 ஆண்டுகள் ஆயுட்காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது

 • Share this:
  தமிழகத்தில் அரசுப்பேருந்துகளின் ஆயுட்காலத்தை அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

  போக்குவரத்து துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, “அரசு பேருந்துகளின் ஆயுட்காலம் ஏற்கனவே 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் என்று இருந்தது. இது, இனிவரும் காலங்களில் 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என்று அதிகரிக்கப்பட்டுள்ளது.

  Also Read:  உள்ளாட்சித்தேர்தல் கணக்கு; தொண்டர்களுக்கு கடிதம் - தினகரன் அடுத்த மூவ்

  இதேபோல் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் என்று இருந்தது. இனிவரும் காலங்களில் இதனை 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Also Read: பேசு பொருளாகும் கொங்கு நாடு விவகாரம்.. கட்சித் தலைவர்களின் அபிப்ராயம் என்ன?

  புதிய அரசாணை வெளியிட்டதன் மூலம் ஏற்கனவே இருந்த ஆயுட்காலத்தோடு ஒப்பிடுகையில் அரசு பஸ்களுக்கு 3 ஆண்டுகளும், அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களுக்கு 4 ஆண்டுகளும் ஆயுட்காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: