• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்

அமைச்சர் ஜெயகுமார்

அமைச்சர் ஜெயகுமார்

தமிழ்வழி பயின்றவர்கள் அரசு பணிகளில் சேர்வதற்கு முன்னுரிமை வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சட்டத்திருத்ததை அமைச்சர் ஜெயகுமார் பேரவையில் அறிமுகம் செய்துள்ளார்.

  • Share this:
தமிழ்வழி பயின்றவர்கள் அரசு பணிகளில் சேர்வதற்கு முன்னுரிமை வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சட்டத்திருத்ததை அமைச்சர் ஜெயக்குமார் பேரவையில் அறிமுகம் செய்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி கல்வித்தகுதியாக உள்ள தேர்வுக்கு ஒன்றாம் வகுப்பில் இருந்து 10 -ம் வகுப்பு வரையில் தமிழில் பயின்றிருக்க வேண்டும்.

Also read: கொரோனா வைரஸ் அச்சம்: தமிழக சட்டப்பேரவையில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

அதேபோல் 12 -ம் வகுப்பு கல்வித்தகுதியாக உள்ள தேர்வுகளுக்கு, 10-ம் வகுப்பு மற்றும்  12-ம் வகுப்பு கல்வியை  தமிழ் வழியிலேயே படித்திருக்க வேண்டும் என்று சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பட்டப்படிப்புக்கான பதவியிடங்களுக்கு 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு பட்டயப்படிப்பு ஆகியவற்றை தமிழில் படித்திருக்க வேண்டும் என்றும், பட்டமேற்படிப்பு தகுதியாக 10, 12, மற்றும் பட்டப்படிப்பை தமிழில் படித்திருக்க வேண்டும் என்றும் சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also read: உங்களுக்கு விலாசம் கொடுத்ததே அதிமுக தான்... சட்டசபையில் கொதித்த முதல்வர்!

இத்தகைய தகுதி இருப்பவர்களே தமிழ் வழியில் கல்வி பயின்ற நபர் என்று கருதப்படுவர் என்றும்  சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தமானது 2020-ம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ் வரும் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்ட திருத்தம் என்று அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, உடனே நடைமுறைக்கும் வரவுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: