முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திருநெல்வேலி கல்குவாரி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு.. தமிழக அரசு சார்பில் தலா ரூ.15 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

திருநெல்வேலி கல்குவாரி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு.. தமிழக அரசு சார்பில் தலா ரூ.15 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

கல் குவாரி விபத்து

கல் குவாரி விபத்து

கல் குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதுதவிர, தொழிலாளர் நல வாரியம் மூலமாக தலா ஐந்து வட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு  தலா 15 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை வட்டம்,  அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த சனிக்கிழமை இரவு திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 6 தொழிலாளர்கள், பாறை குவியலுக்குள் சிக்கி கொண்டனர். ஞாயிறன்று காலை முருகன், விஜய் என 2 தொழிலாளர்கள்  குவாரியில் இருந்து பத்திரமாக தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஞாயிறு அன்று மாலையில் மீட்கப்பட்ட மூன்றாம் நபர் செல்வம், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், இரண்டாம் நாளான நேற்று  இரவு 11 மணியளவில் 4 வது நபர் முருகன் சடலமாக மீட்கப்பட்டார். மீதமுள்ள இரண்டு பேரை மீட்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கல் குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டம் தருவை கிராம அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14.5.2022 அன்று திடீரென மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

இதையும் படிக்க: சிபிஐ சோதனையில் ஒன்றும் கிடைக்கவில்லை: ப.சிதம்பரம் ட்விட்

விபத்து நடந்த இடத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மூலமாக தீவிர மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று  வருகின்றன. இவ்விபத்தில் அரியகுளம் கிராமம், திரு பரமசிவன் என்பவரின் மகன் திரு.முருகன் (வயது 23} மற்றும் நான்குநேரி, இளையார்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் திரு.செல்வன் (வயது 25) ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தி தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும் படிக்க: நெல்லை கல்குவாரி சட்டவிரோதமாக நடந்தது என கூறும் அதிகாரியை தூக்கிலிட வேண்டும் - கே.எஸ்.அழகிரி

top videos

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதுதவிர, தொழிலாளர் நல வாரியம் மூலமாக தலா ஐந்து வட்சம் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Accident, CM MK Stalin, Tirunelveli