முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ் சொன்ன மின்வாரியம்... குஷியில் மாணவர்கள்!

பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ் சொன்ன மின்வாரியம்... குஷியில் மாணவர்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

Electricity | தமிழகத்தில் பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தடையில்லா மின்சாரம் வழங்க பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை விடுத்திருந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் மாணவர்கள் படிக்க ஏதுவாக அனைத்து பகுதிகளிலும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது பகுதி வாரியாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில், தமிழகத்தில் வருகின்ற மார்ச் 13ஆம் தேதி முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. இதனையடுத்து, 10ம் வகுப்பிற்கு ஏப்ரல் 3ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளது.

தற்போது 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை பொதுத்தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், மாணவர்கள் படிக்க ஏதுவாக அனைத்து பகுதிகளிலும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை வைத்திருந்தது.

இதற்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் முழு மின்தடை இருக்காது என்று தெரிவித்துள்ளது. சில பகுதியில் பழுது நீக்க பணி காரணமாக சிறிது நேரம் மட்டும் மின்தடை செய்யப்படும், பணிகள் நிறைவடைந்த பிறகு சீரான மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

First published:

Tags: Power cut, School students, Tamil Nadu