ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கான போனஸ் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தீபாவளியையொட்டி, அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த போனஸ் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கான போனஸ் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழக அரசைப் பொறுத்தவரையில், பொதுத்துறை நிறுவனங்களான மின்சார வாரியம், போக்குவரத்து கழகம், டாஸ்மாக், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

சோஷியல் மீடியா போஸ்ட்களுக்கு கட்டுப்பாடு இல்லையா? - சமூகவலைதள நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

அந்த வகையில் 10 சதவீதம் போனஸை ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் இந்த 10 % போனஸ் பெற்றுக் கொள்கின்றனர்.

நீதிமன்றத்தில் தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகன் பழங்குடியினர் அல்ல - தமிழக அரசு விளக்கம்

இதில் 8.33 % போனஸாகவும், 1.67% கருணைத் தொகையாகவும் என மொத்தம் 10% போனஸ் வழங்க அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

First published:

Tags: Deepavali, Diwali, Tamilnadu