வரும் 9ஆம் தேதி இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க உடனலையில் பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிக்குமாறு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
மேலும், மக்கள் முன்னெச்சரிக்கையாக இதையெல்லாம் செய்ய வேண்டும் என சில டிப்ஸ் கொடுத்துள்ளது.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பலத்த காற்று வீசும் போது மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நீர்நிலைகளின் அருகிலும் பலத்த காற்று வீசும் போது திறந்தவெளியிலும் தன் படம் (Selfie) எடுப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக சங்க மாவட்ட நிர்வாக அறிவுறுத்தும் போது அதனை ஏற்று நிவாரண முகாம்களில் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (முகநூல் ட்விட்டர்) TNSMART செயலி மூலம் பகிரப்படும் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்
அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
மெழுகுவர்த்தி, கைமின் விளக்க, தீப்பெட்டி மின்கலன்கள், மருத்துவ கட்டு, உலர்ந்த உணவு வகைகள், குடிநீர் மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.