• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அம்மா மருந்தகங்கள் மூடப்படுகிறதா? தமிழக அரசு விளக்கம்

அம்மா மருந்தகங்கள் மூடப்படுகிறதா? தமிழக அரசு விளக்கம்

அம்மா மருந்தகம்

அம்மா மருந்தகம்

திமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் அம்மா மருந்தகங்கள் மூடப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா மருந்தகங்களை மூடும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், இது தொடர்பாக  தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

    அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், அம்மா மருந்தகங்களால்  தமிழ்நாட்டு மக்களின் மருத்துவ செலவு பெருமளவு குறைந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்கள் அம்மா மருந்தகங்களில் செயல்பாடுகளை அறிந்து தங்கள் மாநிலங்களிலும் இதுபோன்ற மருந்தகங்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

    இப்போது நிதிச்சுமையை காரணம் காட்டி அம்மா மருந்தகங்கள் முடிவு மூட முடிவு செய்து விட்டதாக தகவல்கள் வருகின்றன. இந்த முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.இதையடுத்து இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் அம்மா மருந்தகங்களை தமிழக அரசு மூடி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தவறான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும்  131 அம்மா மருந்தகங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: அம்மா உணவக பெயர் பலகையில் கலைஞர் கருணாநிதி படம்!


    இந்த ஆட்சி அமைந்ததும் அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை. மாறாக, கடந்த ஆண்டு இயங்கி வந்த அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை 126. இந்த ஆட்சி அமைந்தவுடன் இந்த எண்ணிக்கை 131 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஆண்டுக்கு 60 மருத்துவமனைகள் வீதம் அடுத்த 5 ஆண்டுகளில் 300 புதிய கூட்டுறவு மருந்தகங்களை துவக்குவதற்கு கடந்த சட்டப்பேர்வை கூட்டத் தொடரில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: நீதிமன்றம் கொடுக்காத ஒரு தடையை காரணம் காட்டி அலைக்கழிப்பு - தமிழக தகவல் ஆணையம் மீது குற்றச்சாட்டு!


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: