காவலர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு அறிவிப்பு

சேலம் வியாபாரி முருகேசன்

எடப்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரை சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பெரியசாமி தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

  • Share this:
சேலத்தில் காவலர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசனின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை கிராமத்திற்கு சென்று மது அருந்தி விட்டு பின்னர் கல்வராயன்மலை வழியாக வீடு திரும்பியுள்ளனர். அப்போது ஏத்தாப்பூர் அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார் இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் வந்தவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் குடிபோதையில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் வாக்குவாதம் அதிகரிக்கவே எஸ்.ஐ மற்றும் உடனிருந்த போலீசார் குடிபோதையில் இருந்த இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த வியாபாரி முருகேசன் என்பவரை பிரம்பால் தாக்கியுள்ளனனர். இதில் முருகேசன் மயக்கமடைந்தார்.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் முருகேசன்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக   எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த செய்தி தன் கவனத்திற்கு வந்தவுடன், உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.  தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

உயிரிழந்த முருகேசனின் உடல் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வு நடைபெற்றது. இதில் ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரங்கராஜ் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு முடிவடைந்து அவரின்உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதனையடுத்து முருகேசனின் சொந்த ஊரான எடப்பட்டி கொண்டுசெல்லப்பட்டது.

இந்நிலையில், உயிரிழந்த முருகேசனின் குடும்பத்துக்கு தமிழக அரசு  ரூ.10 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளது. தாக்குதல் நடத்திய காவலர் பெரியசாமி மீது குற்றவியல்  வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Murugesh M
First published: