தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழையின் தாக்கம் இருக்கும்... காரணம் இது தான்..! - பாலச்சந்திரன்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழையின் தாக்கம் இருக்கும்... காரணம் இது தான்..! - பாலச்சந்திரன்
கோப்புப்படம்
  • Share this:
வானிலை கணிப்புகளின் அடிப்படையில் அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்கள் மழையின் தாக்கம் இருக்கும் என்று  பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை துறையின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த 24மணி நேரத்தில் அதிகபட்சமாக செம்மஞ்சேரியில் 4செ.மீ மழை பதிவாகி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம்,சென்னை விமான நிலையம் மற்றும் நீலகிரி குன்னூரில் 3செ.மீ மழை பதிவாகி உள்ளது.

செங்கல்பட்டு, வேலூர் சோழிங்கர்,காஞ்சிபுரம் தாம்பரம், பூந்தமல்லி,மகாபலிபுரம் ஸ்ரீபெரும்புதூர்,சென்னை நகர் பகுதிகள், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 2செ.மீ பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.


மேலும் வளிமண்டலத்தில் கீழ் பகுதியில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக்காற்றும் சந்திக்கும் பகுதி தமிழக பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை இருக்கும். சென்னையை பொறுத்து வரை அடுத்த 24 மணி நேரத்தில் நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்தார்.
First published: January 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading