அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

"தமிழகத்தின் உள் மாவட்டம் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது"

Web Desk | news18-tamil
Updated: November 9, 2019, 2:31 PM IST
அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
கோப்புப் படம்
Web Desk | news18-tamil
Updated: November 9, 2019, 2:31 PM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு கடல்பகுதியில் மீனவர்களுக்கு எவ்விதமான எச்சரிக்கையும் இல்லை. ஆனால் புல்புல் புயல் காரணமாக ஒரிசா,மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேசத்தை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

தமிழகத்தின் உள் மாவட்டம் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்,ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அதிகபட்சமாக 14 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது,சேலம் மாவட்டம் ஓமலூர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய பகுதிகளில் தலா 9 சென்டிமீட்டர் மழை. விருதுநகர் மாவட்டம் சாத்தூர், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை மற்றும் சங்கராபுரம் பகுதியில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
First published: November 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...