Home /News /tamil-nadu /

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Weather Update | சென்னையை பொருத்தவரை முற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் அதன் பிறகு தெளிவாகவும் காணப்படும்.

Weather Update | சென்னையை பொருத்தவரை முற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் அதன் பிறகு தெளிவாகவும் காணப்படும்.

Weather Update | சென்னையை பொருத்தவரை முற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் அதன் பிறகு தெளிவாகவும் காணப்படும்.

    வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்யைில், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமாரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். சென்னையை பொருத்தவரை முற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் அதன் பிறகு தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்,

    அதிகபட்ச வெப்ப நிலையைப் பொறுத்தவரை
    மதுரை,திருச்சி, சேலம், வேலூர்,கரூர் மற்றும் திருத்தணி ஒட்டிய பகுதிகள் பகுதிகளில் 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும், இதன் காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணியிலிருந்து பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் பணி செய்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சூரல்கோடு, பேச்சிப்பாறை இரண்டு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Vijay R
    First published:

    Tags: Weather Update

    அடுத்த செய்தி