தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கபிடிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு
கோப்புப்படம்
  • Share this:
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. ஒரு நாளைக்கு 4,000 பேர்வரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். ஜூலை 31-ம் தேதிவரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளநிலையில், ஜூலை மாத நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

அத்தியாவசியப் கடைகளுக்குத் தடை:

முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமையன்று காய்கறி, மளிகை கடை, இறைச்சிக்கடைகளும் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


எவை இயங்கும்:

மருந்துக்கடைகள், மருத்துவமனைகள் இன்று வழக்கம்போல செயல்படும். பால்கடைகளுக்கு காலை நேரத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஓட்டல்கள், டீக்கடைகள் செயல்படாது. பெட்ரோல் பங்குகளும் செயல்படாது. அத்தியாவசியப் சேவைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்காக மிகச் சொற்பமான பெட்ரோல் பங்குகள் செயல்படும்.
First published: July 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading