Home /News /tamil-nadu /

தற்கொலையை தடுத்த தமிழக அரசின் இலவச பேருந்து திட்டம்.. அமைச்சர் சொன்ன தகவல்

தற்கொலையை தடுத்த தமிழக அரசின் இலவச பேருந்து திட்டம்.. அமைச்சர் சொன்ன தகவல்

அமைச்சர் சிவசங்கர்

அமைச்சர் சிவசங்கர்

எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தாமல் இருந்தாலே அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு பிரஷர் வராது என நகைச்சுவையாக குறிப்பிட்ட அமைச்சர் சிவசங்கர், 14வது ஊதிய குழுவின் பேச்சுவார்த்தை வரும் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த பெண் தமிழக அரசின் இலவச பேருந்து மூலமாக பயணித்து தாய் வீட்டிற்கு திரும்பியதாக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்து துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்துப் பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சமீபத்தில் தான் ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்காக சென்றதாகவும் அந்த கல்லூரியின் முதல்வர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

எதற்காக நன்றி  என காரணம் கேட்டபோது,  தன்னுடைய உறவுக்காரப் பெண் ஒருவர் வீட்டில் வரதட்சணை கொடுமை செய்ததால் தற்கொலை செய்யும் முடிவுக்கு சென்றதாகவும், கணவர் வீட்டில் இருந்து தாய் வீடு திரும்ப வழி இல்லை என கூறியதாகவும், அதைக் கேட்ட அப்பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொள்ளும் முடிவை கைவிட்டு, வெளியில் வந்தால் தமிழக அரசின் பேருந்து வரும் அதில் ஏறி இலவசமாக பயணித்து நம் வீட்டிற்கு வந்துவிடலாம் என கூறியதாகவும் அதனால் அந்தப் பெண் உயிர் காப்பாற்றப் பட்டதாகவும் கல்லூரி முதல்வர் கூறியதாக  அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

மேலும், உதயநிதி குறித்து பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அவர் முதலமைச்சரின் மகன். நாளை தினம்  இந்த அவைக்கு அமைச்சராக வரவேண்டுமென எதிர்பார்க்கப்படுபவர். அவர் எந்த துறை மீதும் பேசியிருக்கலாம், ஆனால் இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்டு யாரும் திரும்பிப்பார்க்காமல், கவனிக்கப்படாமல் இருக்கும் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசினார். அவரின் குரல் வருங்காலத்தில் ஏற்றம்பெறும், என்றார்.

மேலும் படிக்க: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பாக கணபதி ஹோமம்.. மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சர்ச்சை


எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தாமல் இருந்தாலே அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு பிரஷர் வராது என நகைச்சுவையாக குறிப்பிட்ட அமைச்சர் சிவசங்கர், 14வது ஊதிய குழுவின் பேச்சுவார்த்தை வரும் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க: நிலக்கரி தட்டுப்பாடு.. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 யூனிட்டில் உற்பத்தி நிறுத்தம்


மாணவர்கள் பேருந்தில் பயணிக்கும் போது படிக்கட்டு, ஜன்னலில் தொங்குவதை தடுப்பதற்கு, சென்னை மாநகரப் பேருந்துகளில் இருக்கும் தானியங்கி கதவுகள் போல், அனைத்து பேருந்துகளிலும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
Published by:Murugesh M
First published:

Tags: Minister, TN Assembly, Transport

அடுத்த செய்தி