Home /News /tamil-nadu /

தமிழகத்தில் டிஜிபிக்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு... முதன்முறையாக 2 துறைகளுக்கு டிஜிபி பதவி உருவாக்கம்..

தமிழகத்தில் டிஜிபிக்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு... முதன்முறையாக 2 துறைகளுக்கு டிஜிபி பதவி உருவாக்கம்..

டிஜிபிக்கள் எண்ணிக்கை உயர்வு

டிஜிபிக்கள் எண்ணிக்கை உயர்வு

தமிழக காவல்துறையில் முதன் முறையாக இரண்டு பிரிவுகளுக்கு டி.ஜி.பி., பதவி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிலை கடத்தல் பிரிவு மற்றும் சைபர் கிரைம் பிரிவுக்கு டிஜிபி பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எஸ் அதிகாரிகளில் நான்கு ஏ.டி.ஜி.பி.களுக்கு டி.ஜி.பி.களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் ஏ.டி.ஜி.பி.,களாக இருந்த தாம்பரம் காவல் ஆணையர் ரவி, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி ஜெயந்த் முரளி, சைபர் கிரைம் ஏ.டி.ஜி.பி அம்ரேஷ் புஜாரி உட்பட நான்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள், டி.ஜி.பி.,களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். புதிதாக பதவி உயர்வு பெற்றுள்ள இந்த நான்கு டி.ஜி.பி.,களுடன் சேர்த்து தமிழக காவல்துறையில் டி.ஜி.பி.,களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கு முன்பாக தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி கந்தசாமி, சிறைத்துறை டி.ஜி.பி சுனில் குமார் சிங், காவலர் வீட்டு வசதி வாரிய டி.ஜி.பி., ஏ.கே விஸ்வநாதன், தமிழக காவல்துறை தலைமையக டி.ஜி.பி சீமா அகர்வால், சிவில் சப்ளை சி.ஐ.டி., டி.ஜி.பி ஆபாஷ் குமார், சி.பி.சி.ஐ.டி., டி.ஜி.பி ஷகீல் அக்தர்,  உள்ளிட்ட 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் தமிழக காவல்துறை டி.ஜி.பி.,களாக பதவி வகித்து வருகின்றனர்.

இவர்களுள் அயலக பணி டி.ஜி.பி.,களான டி.ஜி.பி சஞ்சய் அரோரா, டி.ஜி.பி., பி.கே ரவி, டி.ஜி.பி., டி.வி ரவிச்சந்திரன் மற்றும் டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் ஆகியோர் அடக்கம். மேற்கண்ட 12 டி.ஜி.பி.,களில் ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தற்போது நான்கு ஏ.டி.ஜி.பி.,களுக்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளித்துள்ளதால் தமிழக காவல் துறையில் டி.ஜி.பி.,களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.



குறிப்பாக தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் ஏ.டி.ஜி.பி.,யாக இருந்து வந்த அம்ரேஷ் பூஜாரி டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழக காவல்துறையில் முதன்முறையாக சைபர் கிரைம் பிரிவுக்கு டி.ஜி.பி பதவி உருவாக்கப்பட்டு அப்பதவியில் அமரேஷ் பூஜாரி டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெண் எஸ்.ஐ விஷம் குடித்து தற்கொலை முயற்சி -அரியலூரில் பரபரப்பு


இதேபோல, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி.,யாக பணிபுரிந்து வந்த ஜெயந்த் முரளி டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழக காவல்துறையில் முதன் முறையாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு டி.ஜி.பி பதவி உருவாக்கப்பட்டு அப்பதவியில் ஜெயின் முரளி நியமிக்கப்பட்டுள்ளார்.



தற்போது தாம்பரம் காவல் ஆணையராக பணிபுரிந்து வரும் ரவி டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்று தாம்பரம் காவல் ஆணையராகவே தொடர்ந்து நியமிக்கப்பட்டுள்ளார்.
அயலக பணியில் இருந்து வரும் கருணாசாகர் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்று அயலக பணியிலேயே நியமிக்கப்பட்டுள்ளார்.
4 ஐ.பி.எஸ் அதிகாரிகள் தற்போது பதவி உயர்வு பெற்றுள்ளதால் தமிழக காவல்துறையில் 12-ஆக இருந்த டி.ஜி.பி.,களின் எண்ணிக்கை தற்போது 16 ஆக உயர்ந்துள்ளது. இருந்தபோதிலும் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ராஜேஷ் தாஸ் நீங்கலாக 15 டி.ஜி.பி.,கள் பணியாற்றி வருகின்றனர்.
Published by:Murugesh M
First published:

Tags: Police, Tamilnadu

அடுத்த செய்தி