முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்

கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்

 Karunanidhi's secretary Shanmuganathan | அண்ணாவின் மறைவுக்கு பின்னர் கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். 1969ம் ஆண்டில் கருணாநிதியின் உதவியாளராக நியமிக்கப்பட்ட சண்முகநாதன், கருணாநிதி உயிரிழக்கும் வரை 48 ஆண்டு காலம் உதவியாளராகவே இருந்து வந்தார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

    முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார். கருணாநிதியின் நிழல் என்று குறிப்பிடும் அளவுக்கு அவருடன் நெருக்கமாக இருந்தவர் அவரது உதவியாளர் சண்முகநாதன்.  தமிழக காவல்துறையில் சுருக்கெழுத்து நிருபராக தனது வாழ்க்கையை தொடங்கிய சண்முகநாதன், எதிர்க்கட்சி தலைவர்கள் மேடையில் பேசுவதை குறிப்பெடுத்து தட்டச்சி செய்து அரசுக்கு அனுப்புவார்.

    அறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பின்னர் கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். அப்போது, 1969ம் ஆண்டில் கருணாநிதியின் உதவியாளராக நியமிக்கப்பட்ட சண்முகநாதன், கருணாநிதி உயிரிழக்கும் வரை 48 ஆண்டு காலம் அவரது உதவியாளராகவே இருந்து வந்தார்.

    கருணாநிதியின் மறைவுக்கு பிறகு சண்முகநாதன் அவ்வப்போது உடல்நல கோளாறால் பாதிக்கப்பட்டு வந்தார்.  கடந்த ஜூன் மாதத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி நேரில் சென்று நலம் விசாரித்தார்.

    இதையும் படிங்க: ஒரே நிகழ்வில் பங்கேற்றும் சந்தித்திக்கொள்ளாத மு.க.ஸ்டாலின் - மு.க.அழகிரி

    இந்நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சண்முகநாதன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    First published: