ஊரடங்கு: நிவாரணம் வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை!

அடுத்த மாதம் மீன்பிடி தடைக்காலமும் வருவதால், தொடர்ந்து மூன்று மாதங்கள் கடலுக்குச் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.

ஊரடங்கு: நிவாரணம் வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை!
கோப்புப்படம்.
  • Share this:
ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து அடுத்த மாதம் மீன்பிடி தடைக்காலமும் வருவதால், தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் நாகை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி என தமிழகத்தின் 13 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் இழுவை படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

தற்போது கொரோனா தடுப்பு பணிகள் காரணமாக அரசின் உத்தரவை ஏற்று மீனவர்கள் கடலுக்குச் செல்லாத நிலையில், அடுத்த மாதம் மீன்பிடி தடைக்காலமும் வருவதால், தொடர்ந்து மூன்று மாதங்கள் கடலுக்குச் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.


இதனால் தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என மீனவர்கள் கவலையோடு கூறுகின்றனர். மீன்பிடி தடைக்காலத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும், தற்போது கடலுக்குச் செல்லாமல் இருப்பதால் மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து மூன்று மாதங்கள் மீனவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமா?

Also see:
First published: March 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading