HOME»NEWS»TAMIL-NADU»tamilnadu financial debts increased more than last year vai

நடப்பு நிதியாண்டில் தமிழகம் இதுவரை ₹ 50 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது - கடந்த ஆண்டை விட 107% அதிகம்

தமிழகத்தின் கடன் நடப்பாண்டில் 50,000 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 107 சதவீதம் அதிகமாகும்.

நடப்பு நிதியாண்டில் தமிழகம் இதுவரை ₹ 50 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது - கடந்த ஆண்டை விட 107% அதிகம்
முதலமைச்சர் பழனிசாமி
  • Share this:

கொரோனா கால ஊரடங்கால் குறைந்த வருவாய் மற்றும் செலவினங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் மாநிலங்கள் அதிக அளவில் கடன் வாங்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. கேர் தர மதிப்பீடுகளின் படி இந்திய அளவில் அதிகம் கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. நடப்பாண்டில் 52,500 கோடி ரூபாயை கடனாக தமிழகம் பெற்றுள்ளது. அதிக கடன் பெற்ற மாநிலங்கள் பட்டியலில் முதல் இடத்தில் மகாராஷ்டிராவும், தமிழகத்திற்கு அடுத்த இடங்களில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் உள்ளன. 2020-21க்கான பட்ஜெட்டில், தமிழ்நாட்டின் நிகர கடன் மதிப்பை 59,209 கோடியாக நிர்ணயித்துள்ளது.

இதில்  தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு, புயல், வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கான நிதி ஒதுக்கீடு, ஜிஎஸ்டியில் மாநில அரசுக்குக் கிடைக்க வேண்டிய நிதி தாமதம் ஆவது போன்ற பல்வேறு காரணங்களால் தமிழக அரசின் நிதி நிலையில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க...நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்; உ.பி.யில் அதிகம் - யு.ஜி.சி தகவல்





அதோடு, தமிழக அரசின் வரி வருமானம் குறைந்ததுடன் கொரோனா சிகிச்சைக்கான செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதால் அதிகளவில் கடன் வாங்க வேண்டிய சூழலில் தமிழகம் இருக்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டில் தென் இந்திய மாநிலங்களிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் 2ஆம் இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

 
Published by:Vaijayanthi S
First published: