ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பயிர்காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு?

பயிர்காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான கடைசி தேதியை, 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

விவசாயிகள் இயற்கை பேரழிவுகளிலிருந்து தங்களின் பயிர்களை பாதுகாக்க பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்று விவசாயத் துறை அறிவுறுத்துகிறது.

கிசான் கிரெடிட் கார்டு (Kisan credit Card) மூலம் பயிர் கடன்களை எடுத்த விவசாயிகள், அவர்களின் பயிர் தானாகவே காப்பீட்டின் கீழ் வருகிறது. மற்ற விவசாயிகள் தங்கள் விருப்பப்படி பயிர் காப்பீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயிர் கடன் இல்லாத விவசாயிகள் தங்களின் பயிர்களுக்கான காப்பீட்டை தனியாகவோ அல்லது பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (Pradhan Mantri Fasal Bima Yojana) இணைந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

தமிழகத்தில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15-ம் தேதியே கடைசி நாள் என தமிழக அரசு கூறியிருந்தது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழை விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். டெல்டா பகுதிகளில் நெற்பயிர்கள் எல்லாம் மழை வெள்ளத்தில் முழ்கியது. அதிமுக அரசு டிசம்பர் 15-ம் தேதி வரை அவகாசம் வழங்கிய நிலையில் திமுக அரசு நவம்பர் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய நிர்பந்திப்பதாக விவசாய சங்கங்கள் கூறுகின்றனர். மேலும் இதற்கான தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்தனர்.

டெல்டா பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி பேசியபோது, பயிர் காப்பீடு இழப்பீடு பிரீமியம் தொகை செலுத்த ஞாயிற்றுக்கிழமை வரை அவகாசம் உள்ளது சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை இல்லாமல் விவசாயிகளின் நலனுக்காக பயிர் காப்பீடு பிரிமியம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பயிர் காப்பீடு பிரிமியம் தொகை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. என்றார்.

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான கடைசி தேதியை, 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்' என, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமருக்கு, தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார், பண்டிகை, கனமழை காரணமாக சிட்டா பெறுவதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது, எனவே நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான தேதியை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Cauvery Delta, Delta district crops, Delta Farmers, DMK, Insurance, Samba crops