Home /News /tamil-nadu /

தமிழகத்தில் மேலும் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மேலும் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கும், நாளை கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  • Last Updated :
    வங்கக் கடலில் நாளை மறுநாள் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நாளை மறுநாள் அதேபகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

    தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பருமழை மேலும் தீவிரமடையும் என்றும் தமிழகத்தில் கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மிக கனமழையும், நாளை கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக வரும் 7 ஆம் தேதி அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை நாடுமுழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் வரும் 7ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்பு இருப்பதால், தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என அறிவித்துள்ளது.

    மேலும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கும், நாளை கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Meteorology department, Rain Update, Tamilnadu

    அடுத்த செய்தி