ஆண்டுக்கு ஒருமுறை மின்கட்டண உயர்வா? மக்களை கசக்கிப் பிழியாதீங்க - தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
ஆண்டுக்கு ஒருமுறை மின்கட்டண உயர்வா? மக்களை கசக்கிப் பிழியாதீங்க - தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
காட்சிப் படம்
மின்வாரியம் லாபநோக்கம் கொண்ட கார்ப்பரேட் நிறுவனம் அல்ல. எனவே, ஆண்டு தோறும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மின்கட்டணம் உயர்வு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், தனது ட்விட்டர் பதிவில், “ தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களுக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நடப்பாண்டில் 52% வரை மின்கட்டண உயர்வை அறிவித்துள்ள வாரியம், இனி மின்சாரக் கட்டணத்தை ஆண்டுக்கு 6% உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது அறிவித்துள்ள மின் கட்டண உயர்விலிருந்து மக்கள் மீண்டு வரவே பல ஆண்டுகள் ஆகும். அவர்கள் மீது ஆண்டுக்கு ஆண்டு மின்சார கட்டண சுமை சுமத்தப்பட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் வாழவே முடியாத நிலை உருவாகி விடும்
நுகர்வோர் விலைக்குறியீடு என்பது சந்தை நிலவரத்தை மதிப்பிடுவதற்கான குறியீடு ஆகும். அதை மின்சாரக் கட்டணத்திற்கும் பொருத்த மின்வாரியம் லாபநோக்கம் கொண்ட கார்ப்பரேட் நிறுவனம் அல்ல. எனவே, ஆண்டு தோறும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்!(4/4)@CMOTamilnadu
தமிழ்நாட்டில் 90% மக்களின் வருமானம் ஆண்டுக்கு 6% உயர்வதில்லை. மின்சார உற்பத்திச் செலவும் ஆண்டுக்கு 6% உயர்வதில்லை. அவ்வாறு இருக்கும் போது நுகர்வோர் விலைக் குறியீட்டை காரணம் காட்டி மின்சார கட்டணத்தை ஆண்டுக்கு 6% உயர்த்துவது மக்களை கசக்கிப் பிழியும் செயலாகும்.
நுகர்வோர் விலைக்குறியீடு என்பது சந்தை நிலவரத்தை மதிப்பிடுவதற்கான குறியீடு ஆகும். அதை மின்சாரக் கட்டணத்திற்கும் பொருத்த மின்வாரியம் லாபநோக்கம் கொண்ட கார்ப்பரேட் நிறுவனம் அல்ல. எனவே, ஆண்டு தோறும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.