புதிய மின் இணைப்பு விண்ணப்பம் - மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு

புதிய மின் இணைப்பு விண்ணப்பம் - மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு
மின்சார வாரியம்
  • News18
  • Last Updated: February 27, 2020, 11:50 AM IST
  • Share this:
வீடுகளுக்கு மின்சார இணைப்பு பெற மார்ச் 1-ம் தேதி முதல் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் விவசாயம், குடிசைகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார இணைப்புகளை பெற பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள உதவி-செயற்பொறியாளர் அலுவலகங்களில் எழுத்து பூர்வமாக விண்ணப்பித்து இணைப்புகளை பெற்று வருகின்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் மின்சார வாரிய இணைதள முகவரியில் மின்சார இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. அதன் பிறகும், உதவி-செயற்பொறியாளர் அலுவலகங்களில் சென்று மக்கள் எழுத்து பூர்வமாக விண்ணப்பித்து இணைப்புகளை பெற்று வருகின்றனர்.


இந்நிலையில் மார்ச் 1-ம் தேதி முதல் வீடுகளுக்கு மின் இணைப்பு தேவைப்பட்டால் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுவும் மின்சார வாரியத்தின் விதிமுறைகளின்படி தங்களது தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விண்ணப்பம் பெறப்பட்டு 10 நாட்களுக்குள் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
First published: February 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading