போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அமமுக டெபாசிட் இழக்கிறது!

டிடிவி தினகரன்

ஒரு தொகுதியில் 6 லட்சம் ஓட்டுக்கள் பதிவாகியிருந்தால் குறைந்தது ஒரு லட்சம் ஓட்டுகளை அந்த வேட்பாளர் பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் டெபாசிட் தொகை திரும்ப கிடைக்காது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தமிழகம் மற்றும் புதுச்சேரி என்று 38 தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அமமுக டெபாசிட் இழக்கும் நிலையில் உள்ளது.

  மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி என்று 38 தொகுதிகளில் டிடிவி தினகரனின் அமமுக போட்டியிட்டது. தென் சென்னை தொகுதியில் மட்டும் அக்கட்சியின் ஆதரவுடன் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் போட்டியிட்டார்.

  இன்று வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில், அமமுக எந்த தொகுதியிலும் முன்னிலையில் வரவில்லை. குறிப்பாக அக்கட்சிக்கு செல்வாக்கு உள்ளதாக கூறப்பட்ட தேனி, ராமநாதபுரம் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் கூட அக்கட்சி பெரிய அளவில் வாக்கு கிடைக்கவில்லை.

  சில தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சியை விட குறைவான வாக்குகளை வாங்கி 5 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

  அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுகவை தொடங்கிய தினகரனுக்கு செல்வாக்கு இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், குறிப்பிடத்தக்க ஓட்டுகளை கூட அவர் பெற முடியாமல் டெபாசிட் இழக்கும் சூழலுக்கு சென்றுள்ளது அக்கட்சியினரை வருத்தமடையைச் செய்கிறது.

  டெபாசிட் பெறுவது எப்படி?
  ஒரு மக்களவை தேர்தலில் ஒரு வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்றால் வேட்புமனுவுடன் டெபாசிட் தொகை ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த டெபாசிட் தொகை தேர்தல் முடிந்த பின்னர் தேர்தல் ஆணையம் திரும்ப கொடுத்துவிடும். ஆனால், அதிலும் ஒரு நிபந்தனை இருக்கிறது.


  அதாவது பதிவான செல்லத்தக்க வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றிருந்தால் மட்டுமே டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும். அதாவது ஒரு தொகுதியில் 6 லட்சம் ஓட்டுக்கள் பதிவாகியிருந்தால் குறைந்தது ஒரு லட்சம் ஓட்டுகளை அந்த வேட்பாளர் பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் டெபாசிட் தொகை திரும்ப கிடைக்காது.  Published by:Sankar
  First published: