Home /News /tamil-nadu /

மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை! மாநிலத் தேர்தல் ஆணையர் மறுப்பு

மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை! மாநிலத் தேர்தல் ஆணையர் மறுப்பு

பழனிசாமி

பழனிசாமி

ஒவ்வொரு மாவட்டத்திலும் 3, 5 ஆயிரம் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் அரசுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
    தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக, உள்ளாட்சி பகுதிகளிலும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி, ‘தமிழ்நாடு முழுவதும் 27 மாவட்டங்களில் நடைபெற்ற 515 மாவட்ட கவுன்சிலர், 5090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 9,624 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும்,
    76,746 கிராம ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், கிராம ஊராட்சி வார்டு 18,137, மன்றத் தலைவர் 410, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் 23 பதவி இடங்கள் என மொத்தம் 18,570 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காவல்துறை சார்பில் 30 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வாக்குச் சீட்டை வகைப்படுத்தி எடுத்துச் செல்லும் அறை, எடுத்துச் செல்லும் நடைபாதை, வாக்குச் சீட்டு எண்ணும் அறை என ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் 5, 6 சி.சி.டி.வி கேமராக்கள் என மொத்தம் 16,000 சி.சி.டி.வி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் 3, 5 ஆயிரம் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் அரசுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஊழியர்கள் 1,890 நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணியை கண்காணிக்கின்றனர்.

    4 லட்சத்துக்கு மேற்பட்ட வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் பணியை கண்காணிக்கின்றனர். எனவே, எந்த முறைகேடுகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. மெதுவாக நடந்தாலும் முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை. நாளைவரை வாக்கு எண்ணிக்கை நடைபெற வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவித்தார்.

    Also see:


     
    Published by:Karthick S
    First published:

    Tags: Local Body Election 2019

    அடுத்த செய்தி