உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம் - வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம் - வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்
  • News18
  • Last Updated: September 20, 2019, 8:40 AM IST
  • Share this:
உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலை அக்டோபர் 4ம் தேதி வெளியிட அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், வாக்காளர் பட்டியலை இறுதி செய்து வெளியிடுவதற்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 1ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலை அச்சு பணிக்கு ஒப்படைப்பதோடு அக்டோபர் 3ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியல் அச்சு பணிகளை முடிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அக்டோபர் 4ம் தேதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


மேலும், அக்டோபர் 5ம் தேதிக்குள் அரசியல் கட்சிகளுக்கு வாக்களர் பட்டியலை வழங்கவும் அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் சமர்ப்பித்துவிட்டதாக கூறியிருந்தார். இதற்கிடையே வாக்குச்சீட்டுகளை அச்சடிக்கத் தேவைப்படும் காகிதங்களுக்கான டெண்டரும் விடப்பட்டிருந்தது.

அதனை ஒட்டி அடுத்த கட்டமாக வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் பதவி வகித்தவர்களின் பதவிக்காலம் முடிந்து 3 ஆண்டுகளானபோதும், நிலுவையில் உள்ள வழக்கு உள்ளிட்ட காரணங்களால் இதுவரை தேர்தல் நடைபெறவில்லை.

Also See...
First published: September 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்