முகப்பு /செய்தி /தமிழ்நாடு / புலம்பெயர் தொழிலாளர் பற்றிய வதந்திகள்... கண்காணிக்க குழு அமைத்து டிஜிபி உத்தரவு!

புலம்பெயர் தொழிலாளர் பற்றிய வதந்திகள்... கண்காணிக்க குழு அமைத்து டிஜிபி உத்தரவு!

சைலேந்திர பாபு

சைலேந்திர பாபு

வதந்தி பரப்பிய பிகாரைச் சேர்ந்த ஒருவர் கைதான நிலையில் தமிழ்நாட்டில் புதிய குழு அமைப்பு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த வதந்திகளை கண்காணிக்க தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அதிகாரிகள் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வதந்தி பரப்பப்பட்டது. பெங்களூரு போன்ற வெவ்வேறு நகரங்களில் நடைபெற்ற வீடியோக்களை திருப்பூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறி சிலர் வதந்தி பரப்பி வந்தனர். இது நாடுமுழுவது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து பிகார் குழு தமிழ்நாடு வந்து ஆய்வு மேற்கொண்டது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த காவல்துறை, தமிழ்நாடு அமைதியாக உள்ளது. வதந்திகளை பரப்புவது மிகப்பெரிய குற்றம். வதந்தி பரப்புவது தொடர்பாக இதுவரை 2 பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த அமன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த வதந்திகளை கண்காணிக்க அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி அவினாஷ்குமார், டிஐஜி அபிஷேக் தீட்சித், துணை ஆணையர் ஹர்ஷ் சிங் உள்ளிட்டோர் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

First published:

Tags: Migrant Workers, Sylendra Babu, Tamilnadu