முகப்பு /செய்தி /தமிழ்நாடு / விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் : டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் : டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

குண்டலபுலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

குண்டலபுலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்தவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். இதையடுத்து ஆசிரமத்தில் தங்கி இருந்த 140-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், 16 பேர் காணாமல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், லட்சுமி அம்மாள்-முத்து விநாயகம், பத்மா, நடராஜன், மற்றும் காளிதாஸ் உள்ளிட்ட ஆறு பேரை காணவில்லை எனக்கூறி அவர்களது உறவினர்கள் கெடா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் அன்புஜோதி, ஆசிரம வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

First published:

Tags: CBCID, Crime News