“தமிழ்நாடு நாள்” எதற்காக தெரியுமா...?

“தமிழ்நாடு நாள்” எதற்காக தெரியுமா...?
தமிழ்நாடு
  • News18
  • Last Updated: November 1, 2019, 9:57 AM IST
  • Share this:
மெட்ராஸ் ஸ்டேட் என்று தமிழ்நாடு மாநிலமாக இருந்தாலும், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னரே தமிழ்நாடு முழுமையான தமிழ் மாநிலமானது.

நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மக்களின் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படும் போதுதான் மாநில எல்லைகளுக்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும் என்று மத்திய அரசிடம் வாதிடப்பட்டது. இதற்காக குழு அமைக்கப்பட்டு, பல கட்ட ஆலோசனைகள் நடத்தி, 1956-ம் ஆண்டில், ‘மாநில மறு சீரமைப்புச் சட்டம்’ உருவாக்கப்பட்டது.

இந்த சட்டத்தின் மூலம் 1956-ம் ஆண்டின் நவம்பர் 1-ம் தேதி ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளம் ஆகிய மாநிலங்களோடு தமிழகமும் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டது.


தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளம் ஆகியவை நவம்பர் 1-ம் தேதியை நெடுங்காலமாக அரசு விழாவாகக் கொண்டாடி வருகின்றன. ஆனால் தமிழகத்தில் இந்த நாள் முன்னர் கொண்டாடப்பட்டது இல்லை. ஏனெனில், 1950-ம் ஆண்டில் மெட்ராஸ் ஸ்டேட் (அன்றைய தமிழ்நாட்டின் பெயர்) உருவாக்கப்பட்டது. ஆனால், அப்போது ஆந்திராவின் பல பகுதிகள், கேரளாவின் பல பகுதிகள் தமிழகத்தில் இருந்தன.

மொழி வாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னரே, இந்த பகுதிகள் அந்தந்த மாநிலங்களுடன் சென்றன. இந்த நிலையில், அண்டை மாநிலங்களைப் போல, தமிழகத்திலும் தமிழ்நாடு நாள், நவம்பர் முதல் தேதியில் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இந்நாளில் தமிழ் அறிஞர்களுக்கும் தமிழ் மொழிக்கும் சிறப்பு செய்யும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழகமெங்கும் நடத்தப்பட உள்ளன.
First published: November 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading