• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழ்நாடு நாள்: கலந்தாலோசித்து முடிவெடுப்பது சிறந்தது... முதல்வருக்கு திருமாவளவன் வேண்டுகோள்!

தமிழ்நாடு நாள்: கலந்தாலோசித்து முடிவெடுப்பது சிறந்தது... முதல்வருக்கு திருமாவளவன் வேண்டுகோள்!

திருமாவளவன்

திருமாவளவன்

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்த நவம்பர்1ஐ தமிழ்நாடு நாளாக தமிழக அரசு கொண்டாட வேண்டும் என்று தொல். திருமாவளவன் கூறியிருந்தார். தற்போது, ஜூலை 18ஐ தமிழ்நாடு நாள் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது தொடர்பாக, ஆலோசித்து தமிழக அரசு முடிவெடுப்பது சிறந்தது என்று அவர் கூறியுள்ளார்.

  • Share this:
    தமிழ்நாடு நாள் தொடர்பாக தமிழக அரசின் அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    1956-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது இந்தியா 14 மாநிலங்களாகவும், 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. அதுவரை ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகியவற்றின் நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்த சென்னை மாகாணத்தின் பெரும்பகுதிகள் அங்கு வாழும் மக்கள் பேசும் மொழிகளின் அடிப்படையில் பிரித்து, புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டன.

    இவ்வாறு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்த நாளான நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக நேற்று அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நவம்பர் 1ஆம் நாள் எல்லைப் போராட்டத்தை நினைவுகூரும் நாளாகத்தான் அமையுமே தவிர, தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது.

    மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி அண்ணாவால் 1968-ம் ஆண்டு ஜூலை - 18ஆம் நாள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட அந்த நாள்தான் தமிழ்நாடு நாள் எனக் கொண்டாடப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைததா, ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் “ என்று அறிவித்தார்.

    இந்த அறிவிப்பை அதிமுக, பாமக, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஏற்க மறுத்துள்ளன.  இதனிடையே திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அரசின் அறிவிப்பு  தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்,தமிழ்நாடு நாள் தொடர்பாக அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பு அனைத்துக்கட்சித் தலைவர்கள், எல்லைமீட்பு போராளிகள், இன உணர்வாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் போன்றோரை அழைத்துக் கலந்தாய்வு செய்து முடிவெடுப்பது சாலச் சிறந்தது. மாண்புமிகு முதல்வருக்கு @mkstalin எமது வேண்டுகோளாக முன்வைக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்த நாளை தமிழக அரசு கொண்டாடவேண்டும் என்றும் தமிழ்நாட்டிற்கு என்று தனியாக கொடியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: