கடந்த சில வாரங்களாக பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1 லட்சத்து 54 ஆயிரத்து 282 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 29 ஆயிரத்து 870 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மாவட்டங்களை பொருத்தவரையில், அதிகபட்சமாக சென்னையில் 7,038 பேரும், கோவையில் 3,653 பேரும், செங்கல்பட்டில் 2,250 பேரும், கன்னியாகுமரியில் 1,248 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 21 ஆயிரத்து 384 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரையில் 28 லட்சத்து 48 ஆயிரத்து 163 பேர் குணம் அடைந்து உள்ளனர்.
இன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில், 1 லட்சத்து 87 ஆயிரத்து 358 பேர் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவுக்கு தமிழகத்தில் இன்று 33 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 145 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க :
கொரோனா 3வது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கைகள் குறைவு: மத்திய அரசு
இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது அமலில் உள்ள வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரையிலான வார இறுதி ஊரடங்கு உத்தரவை திரும்பப்பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :
கேரளாவில் உச்சத்தில் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 46 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி!
அதே நேரம் தமிழ்நாட்டை பொருத்தளவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. உச்சத்தை தொட்ட பின்னரே பாதிப்பு படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.