• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மெகா தடுப்பூசி முகாம்: 22.35 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - சுகாதாரத்துறை தகவல்

மெகா தடுப்பூசி முகாம்: 22.35 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - சுகாதாரத்துறை தகவல்

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற ஐந்து முகாம்களில் மொத்தம் ஒரு கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

  • Share this:
    தமிழ்நாட்டில் 6-ம் கட்டமாக நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில், 22 லட்சத்து 33 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    தமிழகம் முழுவதும் செப்டம்பர் 12ம் தேதி தொடங்கி வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற ஐந்து முகாம்களில் மொத்தம் ஒரு கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்நிலையில் 6-வது கொரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடுபவர்களுக்காக இந்த வாரம் சனிக்கிழமை முகாம் நடத்தப்பட்டது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 50 ஆயிரம் முகாம்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டன. பெரம்பலூர் துறைமங்கலம் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற முகாமினை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடமாடும் தடுப்பூசி முகாமை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார். மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளில் 52 ஆட்டோக்கள் மூலம் வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 பேருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது.

    இதனிடையே தடுப்பூசி முகாமிற்காக அமைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களில் பிரதமர் மோடி படம் அச்சிடப்பட வில்லை என குற்றஞ்சாட்டி ஆட்டோக்களை வழிமறித்து பேனர்களை கிழித்து பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் திமுக-வினர் மற்றும் பாஜகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள, எழில் நகர் பஞ்சாயத்து அரசு நடுநிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமை, முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். இதையடுத்து மாநகராட்சி மண்டல அலுவலகத்திலும், பெருங்குடியிலும் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: