ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆன்லைன் ரம்மி சட்டமசோதா.. ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நாளை சந்திப்பு

ஆன்லைன் ரம்மி சட்டமசோதா.. ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நாளை சந்திப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

ஆன்லைன் ரம்மி தடை செய்வதற்காக தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் சில தினங்களுக்கு முன்பு காலாவதி ஆனது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சட்டத் துறை அமைச்சர் ரகுபதி நாளை சந்திக்கவுள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வது தொடர்பான சட்ட மசோதார் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இதற்கு ஒப்புதல் தராமல் இருந்துவருகிறார். இதனால் தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் சில தினங்களுக்கு முன்பு காலாவதி ஆனது. இதனிடையே ஆளுநரிடம் இது தொடர்பாக கலந்தாலோசிக்க தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி நேரம் கேட்டிருந்தார்.

இதையும் படிங்க: கோகுல்ராஜ் கொலை வழக்கு: கோர்ட்டில் வாயைத்திறக்காத சுவாதி.. சிசிடிவியைப் பார்த்து கோபமடைந்த நீதிபதிகள்!

அந்த வகையில் நாளை ஆளுநரை அவர் சந்திக்கவுள்ளார். நாளை காலை 11 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதில் ஆன்லைன் ரம்மி தடைக்கு ஒப்புதல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து ஆளுநர் ஆர்.என், ரவியிடம் அமைச்சர் ரகுபதி வலியுறுத்துவார் எனக் கூறப்படுகிறது.

First published:

Tags: Online rummy, RN Ravi