ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு... புதிய தளர்வுகள் அறிவிக்கப்படுமா? 14-ம்தேதி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு... புதிய தளர்வுகள் அறிவிக்கப்படுமா? 14-ம்தேதி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 26-ம்தேதி தினசரி கொரோனா பாதிப்பு 610 ஆக இருந்த நிலையில், அதன் பின்னர் படிப்படியாக அதிகரித்தது. உச்சகட்டமாக ஜனவரி 21-ம்தேதி ஒரே நாளில் 30,718 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடு தொடர்பான அடுத்த அறிவிப்பின்போது, மேலும் தளர்வுகளை எதிர்பார்க்கலாம். இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் வரும் 14-ம்தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.

  தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 26-ம்தேதி தினசரி கொரோனா பாதிப்பு 610 ஆக இருந்த நிலையில், அதன் பின்னர் படிப்படியாக அதிகரித்தது. உச்சகட்டமாக ஜனவரி 21-ம்தேதி ஒரே நாளில் 30,718 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

  இதையும் படிங்க - தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு... ஒரே நாளில் 14 ஆயிரம்பேர் டிஸ்சார்ஜ்

  கடந்த மாதம் 31-ம்தேதி தினசரி பாதிப்பு 19 ஆயிரமாக இருந்த நிலையில் அதன்பின்னர் படிப்படியாக பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி 3,086 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  தற்போது நடைமுறையில் இருக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் வரும் 15-ம்தேதியுடன் முடிவுக்கு வருகின்றன. இதையொட்டி புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 14-ம்தேதி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

  இதையும் படிங்க - சின்னம் சிறிதாக இருக்கு... நாம் தமிழர் கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

  இதையடுத்து அன்றைய தினம் அல்லது மறுநாள் புதிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  தற்போது, 1ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. புதிய அறிவிப்பில் நர்சரி பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து தகவல்கள் இடம்பெறலாம்.

  திரையரங்குகள் தற்போது 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. புதிய அறிவிப்பில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் திரைத்துறையினரும், சினிமா ரசிகர்களும் உள்ளனர்.

  Published by:Musthak
  First published:

  Tags: Lockdown, Relaxation