• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா தடுப்பூசி இன்னும் போடலியா....? இன்று மெகா கேம்ப்.. மறக்காம போட்டுக்கோங்க!

கொரோனா தடுப்பூசி இன்னும் போடலியா....? இன்று மெகா கேம்ப்.. மறக்காம போட்டுக்கோங்க!

தடுப்பூசி

தடுப்பூசி

20 ஆயிரம்  தடுப்பூசி முகாம் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட தமிழக அரசு இலக்கு வைத்துள்ளது. சென்னையில் மட்டும் 1600 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

  • Share this:
    தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 20 ஆயிரம் தடுப்பூசி மையங்களில் 15 லட்சம் தடுப்பூசியை செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரொனா பாதிப்பு தொடர்ந்து ஒரு சில மாவட்டங்களில் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.  20 ஆயிரம்  தடுப்பூசி முகாம் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட தமிழக அரசு இலக்கு வைத்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள்ஆகிய இடங்களில்  முகாம் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 1600 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையை பொருத்தவரை தடுப்பூசி முகாம் குறித்து விவரங்களை சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

    காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த தடுப்பூசி முகாம்கள் மாலை 7 மணி வரையிலும் செயல்பட உள்ளது. தடுப்பூசி போடப்பட்ட பிறகு பொதுமக்களுக்கு ஏதேனும் பின் விளைவுகள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள அனைத்து தடுப்பூசி மையங்களிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பூசி மையங்களுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி, முக கவசம் அணிந்திருக்க வேண்டும் மற்றும் கைகளை சானிட்டைசர் மூலம் கழுவுதல் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து தடுப்பூசி மையங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: கூட்டுறவுத்துறை பணிகளுக்கு அடுத்த மாதம் மீண்டும் நேர்முகத் தேர்வு - அமைச்சர் ஐ.பெரியசாமி


    மேலும் மாநில, மாவட்ட, வட்டார அளவில் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது அலையை தவிர்க்கவும், கொரோனா நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் இந்த மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள முகாமில் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திகொண்டனர். பாடல்கள் மூலமும் நேரடியாக மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சீங் பேசுவது போலும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    அமைச்சர் ஆய்வு 

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி ஆகியோர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்து வரும் தடுப்பூசி முகாமில் ஆய்வு செய்தனர்.

    ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு,  கோவிட் நோய்க்கு தடுப்பூசி தான் தீர்வு என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியவர் முதல்வர். இந்தியாவில் உள்ள தலைநகரங்களில் முதன்மையான தலைநகரமாக சென்னை ககந்தீப் சிங் பேடி தலைமையில் தலைநிமிர்ந்து இருக்கிறது.

    மேலும் படிக்க: திருப்பூரில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஆபத்தான தொழிற்சாலை - ஆபத்தை தடுக்க அரசுக்கு கோரிக்கை!


    கடந்த வாரம் 12 ஆம் தேதி சென்னை மாநகராட்சியில் 1,600 தீவிர தடுப்பூசி முகாம்கள் மூலம் 1.9 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செல்லித்தப்பட்டது. அதேபோல் இன்றும் 1,600 முகாம்கள் ஏற்பாடு செயப்பட்டுள்ளது. சுமார் 7 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 2,37,000 டோஸ் தடுப்பூசிகள் சென்னை மாநகராட்சியின் கையில் உள்ளது என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: