தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், நேற்றுடன் ஒப்பிடுகையில் 17 மாவட்டங்களில் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 4506 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் வழக்கம் போல அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 514 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பு ஒவ்வொரு நாளும் குறைந்து வந்தாலும் 17 மாவட்டங்களில் நேற்றைய தொற்று எண்ணிக்கை விட இன்று அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை, திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
தர்மபுரியில் நேற்றைய பாதிப்பு 105 ஆக இருந்த நிலையில் இன்று 114 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் திண்டுக்கலில் நேற்று 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 54 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 125 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று 199 பேருக்கு புதிதாக தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பை விட இன்று 74 பேருக்கு கூடுதலாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதே போன்று திருச்சியில் நேற்று 170 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று 205 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விருதுநகரில் நேற்று 48 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானது. இன்று அந்த எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடியின் பாதிப்பு 59 லிருந்து 75 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் ,திருப்பத்தூர், சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பத்துக்கும் குறைவாகவே கூடுதல் புதிய தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 100க்கும் குறைவான புதிய தொற்று பதிவான மாவட்டங்களின் எண்ணிக்கை நேற்று 25 ஆக இருந்தது. இன்று இந்த எண்ணிக்கை 23 ஆக குறைந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.